Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காப்பாற்றணும்.. இப்பவே வேலையை ஆரம்பியுங்க.. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் "ஆர்டர்".. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை காப்பாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தர வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பாஜக இப்போதே தேர்தல் வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டது.

CM Stalins exclusive order to DMK cadres on the National Parliament elections 2024

எதிர்க்கட்சிகளும் தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலினும் பேசினார். திமுக நிர்வாகி நல்ல சேதுபதி இல்ல திருமண விழாவில் இன்று கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதோடு.. இந்த நாட்டிற்கும் நல்ல விஷயங்களை நாம் சொல்ல வேண்டும். மக்கள் நன்றாக இருப்பதற்காக நாம் பேச வேண்டும்.

இனி எந்த தேர்தல் வந்தாலும் நம் வெற்றிபெற வேண்டும்.. நாடாளுமன்ற தேர்தல்.. சட்டமன்ற தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும் அதில் முறையாக பணிகளை செய்ய வேண்டும். கட்சி தேர்தல்களிலும் முறையாக பணிகளை செய்ய வேண்டும்.

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். 2024 தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். அந்த இலக்கை நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் நாட்டை காக்க முடியும். இந்த நாட்டை காக்க நாம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இப்போது நடப்பது திமுக ஆட்சி அல்ல. அது உங்கள் ஆட்சி.

2 வருடங்களில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். 2 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து இருக்கிறோம். இது நம்முடைய ஆட்சி. நமக்கான ஆட்சி.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்தில் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். நிதி நிலை கொடுமையான பற்றாக்குறையோடு இருந்தது. ஒன்றிய அரசு நமக்கு துணை அளிக்காமல் இருந்தது.

ஆனாலும் அவர்களின் துணை இல்லாமல் தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றி உள்ளோம். நம்பர் 1 மாநிலமாக இதை உயர்த்தி உள்ளோம்.

ஒன்றிய அரசு நமக்கு துணை இல்லை என்றாலும் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். பெண்களுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளோம். குடும்ப தலைவிக்கு நிதி நிலைமை காரணமாக 1000 கொடுக்க முடியவில்லை.

நிதி நிலைமையை சரி செய்துள்ளோம். செப்டம்பர் மாதம் இந்த திட்டமும் செயலுக்கு வரும். பெண்கள் உரிமை மட்டுமின்றி மாநில உரிமைக்காகவும் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

CM Stalins exclusive order to DMK cadres on the National Parliament elections 2024

தேர்தல் பணிகளை விரைவில் செய்யுங்கள். இந்தியாவை காப்பாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தர வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

தேசிய கூட்டணி

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CM Stalins exclusive order to DMK cadres on the National Parliament elections 2024

இந்த விழாவிலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது.

தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+