ஹே என்னப்பா.. ரிமோட் கைவிலங்கு, AI சாட்பாட், கிரிப்டோ கருவி.. முதல்வர் வெளியிட்ட ஹைடெக் அறிவிப்புகள்
சென்னை : குற்றவாளிகளை கைது செய்யும்போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் வாங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது காவல்துறைக்கான பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள், க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்கும் கருவிகள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஹை-டெக் : குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் 25, ரூ.75.07 லட்சம் செலவில் வாங்கப்படும்.
க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் AI-ஐ அடிப்படையாக கொண்டு ChatBot, VoiceBot, Video Chat ஆகியவையுடன் கணினி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
புதிய அறிவிப்புகள் : சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.
விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுகா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
சீருடைப்படி உயர்வு : தாம்பரம் மாநகருக்கு உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.
ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்.
காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications