கூட்டணி கட்சிகளிடம் பக்குவமாக பேசுங்கள்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மனம் வருந்தாத வகையில் இடப்பங்கீட்டை சுமூகமாக முடிக்குமாறு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கும், உண்மையான விசுவாசிகளுக்கும் வாய்ப்பு வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.
இது கட்சிக்காக காலம் காலமாக உழைத்து அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,838 உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, இடப்பங்கீடு பேச்சுவார்த்தை என திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

மாவட்டச் செயலாளர்கள்
இந்நிலையில் கானொலி மூலம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், அதில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். அதாவது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட இன்னும் சில தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மாவட்ட அளவில் இடப்பங்கீடு குறித்து அணுகினால் அவர்களிடம் பக்குவமாக பேசி தேவையற்ற சலசலப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டாராம்.

கட்சிக்கு உழைத்தவர்கள்
அதேபோல், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் விரும்பும்பட்சத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருமாறு மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின். பிரச்சாரம், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் செலவு உள்ளிட்ட விவகாரங்களில் மிகுந்த கவனமுடன் செயல்படுமாறு அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

வெற்றி முக்கியம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 100% வெற்றி முக்கியம் என்பதை அழுத்தம் திருத்தமாக திமுக மாவட்டச் செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின், அதற்கேற்ப தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைத்து தேர்தல் பணிகளில் யாரும் சுணக்கம் காட்டாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications