ஆரிய ஆதிக்கத்திற்குதான் திமுக எதிரியே தவிர! ஆன்மீகத்திற்கு அல்ல.. முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை: திமுக ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி- மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காகவே பிறந்த இயக்கம்தான் நம் திராவிட இயக்கம். இப்போது சீவிடுவேன் என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல, நம் திராவிட இயக்கம்.
சமூகவலைத்தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல முடியும். ஒருவரை சில நொடிகளில் அவரது பிம்பத்தை உடைக்கவும் முடியும். எதிர்மறை பிரச்சாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதை நேர்மறை பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியானது.
திமுகவை யாராலும் கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலையில்லை என கூறியவர்கள் இறுதியில் நம்மிடம் வந்து அடைக்கலம் அடைகிறார்கள். நாம் இன்று பாஜக, அதிமுக போன்றவர்களுடன் மோதிக் கொண்டிருக்கிறோம். சாதி, மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
பாஜகவின் சாதித்தன்மை நம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. பாஜகவுடன் இருந்தால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது அதிமுக. தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி, அதை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications