எனக்கு உடல்நிலை சரியில்லையாம்.. கேட்டா சிரிப்புத்தான் வருது.. எனக்கு என்ன குறை?: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எனக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் பேசுவது சிரிப்பை ஏற்படுத்துகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் 'தமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு 'அயலகத் தமிழர் விழா' சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 'எனது கிராமம்' என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "எனக்கு எப்போதும் மக்களை பற்றியே நினைப்பாக இருக்கிறது. நான் என்னைப் பற்றி நினைப்பதே கிடையாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்.
எனக்கு உடம்பு சரி இல்லையா?: எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமில்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் பேசுவதை பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. அதைவிட எனக்கு வேறு என்ன குறை இருக்கப் போகிறது?
நேற்று ஒரு பெண்மணி, மகளிர் உதவித்தொகை, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத் தொகை என ஒரு மாதத்தில் ரூ.8 ஆயிரம் அரசு கொடுத்ததை சந்தோஷமாக கூறினார். அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாகம். எனக்கு மக்களை பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். எனது சக்தியை மீறி உழைப்பவன் நான். எனவே இதுபோன்ற செய்திகளை ஒதுக்கிவிட்டு மக்களுக்காக உழைப்பேன்.
அயலக தமிழர் நல வாரியம் : புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நலுனுக்காக வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு உருவாக்கி அரசாணை வெளியிட்டு வாரியம் அமைக்கவும் சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, அயலக தமிழர் நலனுக்காக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரை நியமித்து குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியமும் துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைது செய்யப்படுகிற சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் தரப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு மத்திய அரசுடன் இணைந்து உரிய நிவாரணங்களை இந்த துறை கொடுத்து வருகிறது.
மருத்துவ இயலாமை மற்றும் பல காரணங்களால் தாயகம் திரும்ப இயலாத தமிழர்களை, தாய் நாட்டுக்கு அழைத்து வரவும், அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடலை இந்தியா கொண்டுவரவும் ரூ.1 கோடி வரை சுழல்நிதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகவர் மீதான புகார் போன்ற வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அளித்த புகாரில் 53 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இங்கு இருக்கும் நிலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரிசெய்ய டிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் அன்னையின் குழந்தைகள்: உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் இப்படி பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், பல்வேறு பிரச்சினைகள் சிக்குகின்றபோது தமிழக அரசு விரைவாக செயல்பட்டு அவர்களை பத்திரமாக தாய்நாட்டு அழைத்து வந்துள்ளது. வெளிநாடு மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், இயற்கை பேரிடர்களில் சிக்கியபோதும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த 'எனது கிராமம்' என்னும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது சேமிப்பை தமிழகத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு போடப்பட்டு அரசு மற்றும் தொழில்நிறுவனங்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'வேர்களை தேடி' என்பது இந்தாண்டுக்கான முத்தாய்ப்பு திட்டமாக அமைந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாக இதை பார்த்து அகம் மகிழ்கிறேன்.
நீராலும், நிலத்தாலும், நாடுகளாலும், கண்டங்களாலும் நாம் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே நிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். தமிழ்நாட்டு வாருங்கள். தமிழோடு இணைந்திருங்கள். எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருந்திடுங்கள்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications