“புது புரளியை கிளப்புகிறார் மோடி.. பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது”.. ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: தோல்வி பயத்தில் பிரதமர் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார் என்றும், பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்ட வாக்குப்பதிவு இதுவரை நடந்து முடிந்துள்ளது. இன்னும் 3 கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. 5வது கட்டத் தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, ரேஷனில் 10 கிலோ உணவு தானியம் இலவசம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உத்தரவாதங்களை அளித்து இந்தியா கூட்டணி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவற்றை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேச்சு: பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை வழங்கும் சில அரசியல் கட்சிகளால், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆள் இல்லை. பேருந்துகள் அதிகம் இயக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது என்று பேசினார் பிரதமர் மோடி.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இந்த திட்டத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் குறித்து பேசியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்: இந்நிலையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில், பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு பிரதமர் பொய் பரப்புரை மேற்கொள்கிறார் என்றும், 10 ஆண்டு சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.
வெறுப்பு: பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் - சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. உத்தர பிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.
மலிவான உத்தியை கையில் எடுத்துள்ளார் மோடி: மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை - பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.
உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும், சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பாஜகதான்.
புதுப் புரளி: பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை எனப் புதுப்புரளியை கிளப்பி இருக்கிறார்.
உண்மை கிலோ என்ன விலை?: பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.
பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது. பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!" என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications