துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்லி தர வேண்டாம்.. சட்டசபையில் முதல்வர் காரசாரம்
சென்னை: துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் செய்தனர்.

அப்போது அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறுகையில் காவிரி பிரச்சினை 50 ஆண்டுகால பிரச்சினை. காவிரி நீரை பெறுவதற்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவநதி, தமிழகத்தின் உயிர் நாடி. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது.
காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவதுதான் நியாயமானது.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும். பயிர்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்பிக்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை.
தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால்தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ 13,500 தான் அறிவிக்கப்பட்டுள்ளது, அது போதாது. கர்நாடகாவில் தேசிய கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது.
தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும். கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மனதோடு செயல்பட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டாம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக பேசவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை நான் நிரூபிக்கட்டுமா?
ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது. திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் காவிரி குறித்து பல முறை பேசியுள்ளனர். தவறான கருத்துகளை அவையில் பதிவு செய்யக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications