Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாது.. CAA வராது.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கால் வைக்க விட மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "சிஏஏ சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்" என்றார்.

 CM Stalin says that We will not allow CAA to set foot in Tamil Nadu

மத்திய இணை அமைச்சரின் இந்தக் கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம் என உறுதிபடக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற் காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது தி.மு.கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+