இது தான் எனது உடல் ரகசியம்! அளவு சாப்பாடு மட்டுமே.. மனம் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முதல்முறையாக தனது உடல் ரகசியத்தை பற்றி உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்வு மூலம் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
அதில் தாம் எப்போதுமே அளவு சாப்பாடு மட்டுமே சாப்பிடுவேன் என்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது பற்றியும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவித்திருக்கிறார்.
எப்படி ஒரே மாதிரி இருக்கிறேன் என்பதை பலரும் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள் என்றும் இது தனக்கு ஆச்சரியத்தை தருகிறது எனவும் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை பொறுத்தவரை உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தினமும் நடைபயிற்சியை கட்டாயம் கடைபிடிக்கக் கூடியவர். அதேபோல் உணவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கக்கூடியவர். கறி, கோழி, உள்ளிட்ட அசைவ உணவுகளை காட்டிலும் மீன் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியவர். அதேபோல் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் ஸ்டாலின்.

மிகவும் ஆக்டிவாக
இதனிடையே முன்பு ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், பசியோடு சாப்பிட அமர்ந்து பசியோடு எழுந்துவிடுவேன் என்று கூறியிருந்தார். அதாவது பசிக்குது என்பதற்காக வயிறு முட்ட உணவு சாப்பிடும் பழக்கம் அவருக்கு கிடையாது. அளவு சாப்பாடு முறையை பின்பற்றக்கூடியவர். இதனால் தான் அன்று எப்படி இருந்தாரோ அதே போல் இன்றும் தொப்பையில்லாமல், உடல் பருமனாகாமல் ஸ்லிம்மக ஆக்டிவாக இயங்குகிறார்.

ஸ்டாலினுக்கு கேள்வி
இந்நிலையில் உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்வில் தனது உடல் ரகசியம் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு; 24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதற்கேற்ப உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பீர்களா? இந்தக் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலின் விவரம் வருமாறு;

ஸ்டாலின் பதில்
''எல்லோரும் இதனை ஆச்சர்யமாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.நான் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கேன்.முன்பு கட்சிப் பணி மட்டும் இருந்தது - இப்போது நிர்வாகப் பணியும் சேர்ந்திருக்கிறது.அதனால் வேலைகள் அதிகமாகி இருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பிரித்து - நேரம் ஒதுக்கி செயல்படுகிறேன்.காலையில் உடற்பயிற்சி - மாலையில் நடைப்பயிற்சி, சரியான - அளவான உணவு என எனது உடல் நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன்.வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது. இதில் ரகசியம் எதுவும் இல்லை.''
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications