ஆடியோ! துரைமுருகனுக்கு போன் போட்ட ஸ்டாலின்! பிடிஆர் பற்றி பேசியது என்ன? பின்னணியை சொன்ன "புள்ளி"
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோக்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோக்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிடிஆர் விவகாரத்தில் அவரை சுற்றி இருக்கும் யாரோ ஒரு நபர்கள்.. அவரின் பலவீனத்தை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்து இருக்கலாம்.. அவர் இந்த ஆடியோ பற்றி புகார் கொடுத்து இருக்கலாம்.. அவர் சைபர் கிரைமில் புகாருக்கு சென்று இருக்கலாம்.
இது அவரின் குரலாக இருக்க 100க்கு 100 வாய்ப்பு உள்ளது. அவர் அதிகம் பேசுவது அவருக்கு பிரச்சனை ஆகி உள்ளது. சக அமைச்சர்களை அவர் சரியாக நடத்தவில்லை. மதிக்கவில்லை. கட்சிக்காரர்களை மதிக்கவில்லை.
உட்கட்சி நிர்வாகிகளே அவரை சந்திக்க அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். பொது இடங்களிலேயே அவர் சக அமைச்சர்களை விமர்சிக்கிறார். பொது இடங்களில் இப்படி பேசியவர் உள்ளே அபப்டி பேசி இருக்க மாட்டாரா?
அவரை திமுகவில் வீழ்த்தவில்லை. ஆனால் அவர் பெரிய ஆள் என்ற மனப்பாங்குடன் இருந்துள்ளார். அவர் தனக்கு பெரிய அரசியல் பின்னணி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அமைச்சர்கள் திமுக தலைமையை பரிகாசம் செய்வது இதற்கு முன் நடந்து உள்ளது.
ஆனால் அந்த ஆடியோவில் இருப்பது போல யாரும் பேசியது இல்லை. சீனியர் அமைச்சர் துரைமுருகனுக்கு போன் செய்து இந்த ஆடியோவால் நான் ஒருவாரமாக தூங்கவில்லை என்றும் கூட முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.
3 மணி வரை கூட எனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி உள்ளார். பிடிஆரை சந்திக்க முதல்வர் மறுத்துள்ளார். ஆனால் பிடிஆர் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் அவரின் நாட்கள் தள்ளிப்போகவில்லை.
மே 1ல் முதல் வாரம் 3ம் வாரத்திற்குள் அவர் ராஜினாமா செய்யலாம். ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அவர் ராஜினாமா செய்வார். அவரின் ஆடியோ இன்னமும் இருக்கிறது. 1 வருடத்திற்கு முன் பேசிய ஆடியோ அது. அதன் ஆடியோக்கள் கண்டிப்பாக வரும்.
அவரின் அதிகப்படியான பேச்சு இப்போது அவருக்கே பாடம் கற்றுக்கொடுத்து உள்ளது. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. இதை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்யும், சிபிஐயிடம் புகார் கொடுப்பார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு திறப்பு: இந்த செய்தியில் இடம்பெற்ற தகவல்கள் முழுக்க முழுக்க பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்த தனிப்பட்ட கருத்துக்கள். இதற்கும் ஒன்இந்தியா தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications