அப்பா.. அப்பா.. சட்டசபையில் திடீரென கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்.. தழுதழுத்த குரலால் அமைதியான அவை
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் திடீரென்று கண்கலங்கினார். அதன்பிறகு சில வினாடிகள் பேசாமல் நின்ற முதல்வர் கண்ணீரை துடைத்த பிறகு மீண்டும் பேச தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் ஏன் கண்கலங்கினார்? சட்டசபையில் என்ன நடந்தது?. விரிவாக பார்க்கலாம்.
2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இன்றுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை தொடங்கியது.

இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது திடீரென்று கண்கலங்கினார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரி செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‛புதுமை பெண்' திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்த திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரி வருவது 30 விழுக்காடு அதிகமாகி உள்ளது.
இதேபோல் ‛தமிழ் புதல்வன்' திட்டம். மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி இருக்கிறோம். அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமை பெண் திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார். என் குடும்பம் வறுமை காரணமாக கல்லூரி சென்று படிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. பணம் இல்லை. அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார் என்று கூறினார். ‛புதுமை பெண்' திட்டத்தை கேள்விப்பட்டு என் கல்லூரி செலவை நானே பார்த்து கொள்கிறேன் என்றதும் என் அம்மா சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் தினமும் பஸ்சில் போகனுமே? என்று சொன்னார். அதற்கு தான் ‛விடியல்' பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன். ஆக 2 திட்டங்களை பயன்படுத்தி கொண்டு நான் படித்து வருகிறேன் என்று சொன்னார். அந்த மாணவி சொன்ன சொற்கள் தான் விடியலுக்கான சாட்சி. அதனால் தான் தமிழ்நாடு மாணவ-மாணவிகள் அப்பா.. அப்பா என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்த பாச உணர்வு தான் முக்கியம்'' என்று கூறி கண்கலங்கினார். அப்போது அவரது குரல் தழுதழுத்துப்போனது. சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார்.
அதன்பிறகு கண்களை துடைத்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பேச தொடங்கினார். அப்போது, ,‛‛ஊட்டச்சத்தை உறுதி செய் என்று ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளோம். போதிய சத்து இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் தீவிர ஊட்டச்சத்து உணவு என்பது வழங்கப்பட்டது. அதில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதில் .77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட 76,705 பச்சிளம் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டது. இதனால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து இருக்காங்க. இதில் பயனடைந்த தாய், என் குழந்தை மிக குறைவான எடையுடன் தாய் பிறந்தது. என்ன செய்யப்போறோம் என்று நினைத்தேன். குழந்தையை வளர்க்கும் அளவுக்கு என்னிடம் பணவசதி இல்லை. முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தால் நிறைய பொருட்கள் கிடைத்தது. அதன்மூலம் நல்ல ஆரோக்கியத்துடன் என் குழந்தை வளர்ந்து உள்ளதாக சொன்னார். அந்த தாயின் கனிவான வார்த்தைகளில் விடியல் தெரிகிறது'' என்றார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications