ரூ.5000 + ரூ. 2000.. ஒரே நாளில் பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்.. ஸ்டாலின் அறிவிப்பிற்கு பின் உள்ள காரணம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, பீகார் பெண்களுக்கு வழங்கப்பட்ட ₹10,000 நிதியுதவித் திட்டம். இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பா.ஜ.க பக்கம் திருப்பியது.

மதுரை மாநாடும் மோடியின் திட்டமும்
பீகாரில் கிடைத்த இந்த வெற்றியின் பார்முலா தற்போது தமிழகத்திலும் எதிரொலிக்கப் போகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார். விரைவில் மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பீகாரைப் போலவே தமிழகப் பெண்களுக்கும் ₹10,000 வழங்கும் புதிய திட்டத்தைப் பிரதமர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் மூலம் தமிழகப் பெண்களின் ஆதரவைப் பெற்று, பா.ஜ.க-வின் செல்வாக்கை மாநிலத்தில் நிலைநிறுத்துவதே பிரதமரின் நோக்கமாக உள்ளது.
ஸ்டாலினின் அதிரடி வியூகம்
மத்திய அரசின் இந்தத் திட்டத்தைப் பற்றிய ரகசியத் தகவல்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியவந்தன. பா.ஜ.க-வின் இந்தத் திட்டத்தை எதிர்கொள்ள அவர் உடனே களத்தில் இறங்கி உள்ளார். மோடி மதுரையில் அறிவிப்பை வெளியிடும் முன்பே, தமிழக அரசின் சார்பில் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதோடு பெண்கள் மத்தியில் திமுகவிற்கு மட்டுமன்றி தமிழக வெற்றிக்கழகத்தில் பெரிய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. முக்கியமாக இளம் பெண்கள் பலர், முதல் தலைமுறை வாக்காளர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்களையும் கவரும் வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஸ்டாலினின் திட்டம்
அதன் ஒரு கட்டமாகவே தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஸ்டாலின் விளக்கம்
ஸ்டாலின் கூறிய விளக்கத்தில், தேர்தலுக்காக மகளிர் உரிமை தொகை தடுக்கப்படலாம். எனவே ப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மொத்தமாக 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .
மேலும் அடுத்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டு அறிவிப்பு
இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு உள்ளார். மேலும்.. மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி சட்ட ரீதியாக தடுக்க வாய்ப்புகள் உள்ள காரணத்தாலும் கூட.. ஸ்டாலின் முன்கூட்டியே இந்த பணத்தை அனுப்ப முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
₹5,000 சுயத்தொழில் திட்டம்
இன்று அளிக்கப்பட்ட ரூ.5000 போக இது போக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தலா ₹5,000 வழங்கும் புதிய திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார். இது ஒரு கடன் உதவித் திட்டமாகவோ அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான மானியமாகவோ இருக்கலாம். அல்லது நேரடியாக வங்கிகளில் பணம் வழங்கும் திட்டமாகவோ இருக்கும். இதற்கான இறுதி வடிவம் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications