‛மக்களோடு ஸ்டாலின்’.. நாளை அறிமுகமாகும் புதிய செயலி.. திமுக பவளவிழாவில் அசத்தும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுகவின் பவளவிழா கொண்டாட்டம் ‛மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூரில் தொடங்கி வைக்க உள்ள நிலையில் அதன பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இந்நிலையில் தான் திமுகவின் பவளவிழா நாளை வேலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் மறைந்த முதல்வர் அண்ணா, பெரியார், பாரதிதாசன், கருணாநிதி, அன்பழகன் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இது ஒருபுறம் இருக்க தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய செல்போன் செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் அந்த செயலின் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது ‛மக்களோடு ஸ்டாலின்' என்ற செயலி என்பது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் செயல்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு, தமிழக அரசின் செயல்பாடுகள குறித்த விபரங்கள் அந்த செயலியில் இடம்பெற உள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் குறித்த முழுவிபரமும் இந்த செயலியில் இடம்பெற உள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது திமுக தயாராகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் திமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது ‛மக்களோடு ஸ்டாலின்' என்ற செயலியை அறிமுகம் செய்வதன் மூலம் திமுக அரசின் சாதனைகளை மக்கள் தங்களின் செல்போனில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள முடியும்.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு வலுசேர்க்கலாம் என்ற வகையில் ‛மக்களோடு ஸ்டாலின்' என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications