Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றப்படும் "உயரிய" ஐஏஎஸ்.. ஸ்டாலின் எடுக்கும் மிக முக்கிய முடிவு.. அடித்தளமே மாற போகுதே.. தூள்

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லோக்சபா தேர்தலுக்கு பின் கண்டிப்பாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்ததும் தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு ரிப்போர்டுகள் சென்று கொண்டு இருக்கிறதாம்.

CM Stalin to change the BIGGEST IAS officer soon for these reasons

தமிழ்நாட்டில் புதுச்சேரியில் என்று 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலினுக்கு உறுதியான ரிப்போர்ட் சென்றுள்ளதாம். மத்திய அரசில் பாஜக வெல்ல வாய்ப்பு குறைவு. மெஜாரிட்டி கிடைக்காது. யாருக்கும் மெஜாரிட்டி வராது. அப்படி இருந்தால் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

இதை இரண்டையும் கேட்டு ஸ்டாலின் உற்சாகம் ஆகி உள்ளாராம். முக்கியமாக சமீபத்தில் மாவட்ட அளவில் நிர்வாகிகள், அமைச்சர்களிடம் ஸ்டாலின் பேசி இருக்கிறார். திமுகவின் உள்ளூர் நிலவரம் தொடங்கி தேர்தல் பணிகள் நடத்தப்பட்ட விதத்தை பாராட்டியும், தகவல்களை கேட்டும் பேசி இருக்கிறார் .

இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம்.

உயரிய ஐஏஎஸ் மாற்றம்: இதற்கு இடையில் தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லோக்சபா தேர்தலுக்கு பின் கண்டிப்பாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உயரிய பொறுப்பில் உள்ளவர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய புள்ளியாக இருக்கிறார்.

ஆட்சியில் அதிக வாய்ஸ் உள்ளவராக இருக்கிறார். இவரின் பேச்சை டாப்பில் இருக்கும் பலர் அப்படியே கேட்கும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அவரை தூக்கி அடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு டம்மி போஸ்டிங் கொடுத்து ஓரம்கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி மாற்றம்: கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. குறிப்பாகத் திருப்பத்தூர் திருவண்ணாமலை சேலம், தென்காசி செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டார். அது தவிர திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராக நியமனம் செய்யப்பட்டார். இது தவிர லட்சுமி ஐஏஎஸ், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லோக்சபா தேர்தலுக்கு பின் கண்டிப்பாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+