சரியாக ரிசல்ட்டுக்கு முதல்நாள்.. கண்ணை அசைத்த ராகுல் காந்தி.. முதல் ஆளாக "துண்டு" போடும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை லோக்சபா தேர்தல் 2024 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் இன்று திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளை திமுக ஏற்கனவே எடுக்க தொடங்கிவிட்டதாக திமுக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை திமுக வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லி திமுக அலுவலகத்தில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செய்தனர்

Lok Sabha election 2024 BJP Congress 2024

இவர்களை டெல்லியில் உள்ள திமுக மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள் சந்தித்து வரவேற்பு கொடுத்தனர். லோக்சபா தேர்தல் குறித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து திமுக நிர்வாகிகள் அவர்களிடம் பேசினார்.

ஸ்டாலின் ரேஸ்: இந்த நிலையில்தான் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளை திமுக ஏற்கனவே எடுக்க தொடங்கிவிட்டதாக திமுக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் புதுச்சேரியில் என்று 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலினுக்கு உறுதியான ரிப்போர்ட் சென்றுள்ளதாம். எக்சிட் போல் முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன.

தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை திமுக கூட்டணியினர் கைப்பற்றுவார்கள் என பெரும்பாலான கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 1தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 1 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் பெரும்பாலான கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக மத்திய அரசில் பாஜக வெல்ல வாய்ப்பு குறைவு. மெஜாரிட்டி கிடைக்காது. யாருக்கும் மெஜாரிட்டி வராது. அப்படி இருந்தால் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தியா கூட்டணி சார்பாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

இதை இரண்டையும் கேட்டு ஸ்டாலின் உற்சாகம் ஆகி உள்ளாராம். இன்று மாவட்ட அளவில் நிர்வாகிகள், அமைச்சர்களிடம் ஸ்டாலின் பேச இருக்கிறார். திமுகவின் உள்ளூர் நிலவரம் தொடங்கி தேர்தல் பணிகள் நடத்தப்பட்ட விதத்தை பாராட்டியும், தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல்களையும் விசாரிக்க இருக்கிறார்.

இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம்.

அமைச்சரவை: முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணி தலைவர்களுக்கு முக்கியமான ஐடியா ஒன்றை கொடுத்து உள்ளாராம். எம்பி டி ஆர் பாலு மூலம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில தகவல்களை அனுப்பி உள்ளாராம். அதில், நாளை தேர்தல் முடிவு வர தொடங்கிய உடன் நாம் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். நம்முடைய எம்பிக்கள் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று பிற்பகலில் தெரிந்தால் அன்று மாலையே டெல்லிக்கு செல்ல வேண்டும்.

அன்று இரவே இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். அமித் ஷா வேகமா இருப்பார். நாம் அவரை விட வேகமாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் கடந்த தேர்தலுக்கும் முந்தைய தேர்தலில் தொங்கு சட்டசபை உருவான போது மெஜாரிட்டி இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லை என்றாலும் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்தார்.

அதே மாடலை தேசிய அளவில் பாஜக செய்யலாம் என்கிறார்கள். அதை நாம் விட கூடாது, என்று ஸ்டாலின் ஐடியா கொடுத்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+