வாட்ஸ் ஆப் + டிராபிக் ஜாம்.. ஒரே நாளில் 2 பெரிய ஆர்டர்களை போட்ட ஸ்டாலின்.. இன்று மீண்டும் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு 2ம் நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

2 நாள் கூட்டமான இதில் நேற்று முக்கியமான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்தார். . பொதுவாக வருடா வருடம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு ஆகும்.

 CM Stalin to hold a second meeting with police officials and collectors today

நேற்று கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது. 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும் ஆட்சியர்களை கீழ் பல்வேறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களை நான் சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை நான் சந்தித்து வருகிறேன்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம். பொதுமக்கள் அதிகம் காட்டுவது முதலாவது இலக்கு!

ஆலோசனையில் முக்கிய உத்தரவு: இரண்டாவது, பொது முழுமையாகத் தடுப்பது. அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை அமைதியான தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியுமா என்று குழப்பம் திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்! இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சாலை விபத்து: மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திடும் முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

சென்னை உள்ளிட்ட தரக்கூடிய ஒன்றாக பல இருப்பது மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் போக்குவரத்து நெரிசல். குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அதனைக்

அதனை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.

பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.

பாதுகாப்பு முக்கியம்: சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.

தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூகஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்னுரையாக சில கருத்துகளை நான் கூறினேன். என் மனதின் எண்ணங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். நான் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும் இதனைத் தாண்டியும் பல்வேறு நடப்புகள் குறித்தும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேரவும் உங்களது செயல்திட்டங்களையும் இங்கு வழங்குங்கள். ஆக்கபூர்வமான கருத்துகளையும் கருத்துகளைச் சொல்ல இருப்பவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்பிற்கு வேண்டிய வசதிகள் குறித்து, இக்கூட்டம் முடிந்த பிறகு, துறைத் தலைவர்களிடம் நீங்கள் முறையிட்டு தீர்வு காணலாம். எனவே, மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மட்டும் இங்கே கருத்துகளைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+