மின்சார பேருந்து சேவை எப்போது தொடங்கும்? சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளின் சேவை வியாசர்பாடி பணிமனையில் இருந்து இயங்க உள்ள நிலையில், இது 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் 625 மின்சார பேருந்துகளை இயக்கத்திற்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 625 மின்சார பேருந்துகளை 5 பணிமனைகளின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார 120 பேருந்துகளை இயக்குவதற்கு பணிகள் நடந்து வந்தன. பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாக கட்டடம், பணியாளர்களுக்கான ஓய்வறை, புதிய மின்மாற்றிகள் நிறுவுதல், தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. மொத்தமாக இதுபோல் 5 பணிமனைகள் மாற்றப்பட உள்ளன.
வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்க உள்ளது. இந்த நிலையில் வியாசர்பாடியில் இருந்து இயங்க உள்ள 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 30ஆம் தேதி தொடங்க உள்ளார். இதன்பின் அடுத்தடுத்த பணிமனைகளில் விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
கூடுதல் விலை கொண்ட மின்சார பேருந்துகளை கையாள பணியாளர்கள் இல்லாத காரணத்தால், டெண்டரில் தேர்வான நிறுவனமே பேருந்தை இயக்கி, பராமரிக்க உள்ளது. அரசுத் தரப்பில் நடத்துநர்கள் பணியாற்றுவார்கள். அதேபோல் வழக்கமான பேருந்துகளுக்கு பெறப்படும் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் கூறி இருக்கிறார்.
அதேபோல் மின்சார பேருந்துகள் அதிகரிப்பால், டீசல் பேருந்துகள் குறைக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. மின்சார பேருந்துகள் அதிகரிக்கும் பட்சத்தில் சாலைகளில் ஒலி மாசு குறையும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மின்சார பேருந்துகளில் பயணிக்க சென்னை மக்களும் அதிக ஆர்வமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications