கல்லூரி மாணவர்களுக்கு AI சந்தாவோடு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு AI சந்தாவோடு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காலகட்டத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தாமதமாகிக்கொண்டே வந்தது.

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரபல கணினி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய ஹெச்பி, டெல், ஏசெர் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வழங்கப்பட்டது. 15 இன்ச் எல்இடி திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்டு டிஸ்க், 720 பி ஹெச்டி கேமரா, ப்ளூடூத் 5.0 என நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த மடிக்கணினி ரூ.21,650-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 2026 ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 5 ஆம் தேதி சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், மேயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்குகின்றனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 2 மாதங்களில் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
லேப்டாப் உடன் AI தொழில்நுட்ப சந்தாவும் வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications