இதுவேறயா? அமைச்சரவை மாற்றத்தோடு.. புல் ஸ்டாப் வைக்காத ஸ்டாலின்.. அதிகாரிகள் மாற்றமும் இருக்காம்!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில அதிரடி சம்பவங்கள் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்: இது போக நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.
ஆலோசனை: இந்த நிலையில்தான் துணை முதல்வர் உதயநிதியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் இருந்தனர். முதல்வருக்கு இருப்பது போல, துணை முதல்வருக்கும் செயலாளர்கள் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரி யார்?: உதயநிதி துணை முதல்வாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.
உதயநிதிக்கு துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: துணை முதல்வர் நியமனம், அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் ஆகியவை நடந்திருப்பதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றமும் நடக்கவிருக்கிறது. இதற்கான ஆலோசனையும் நடந்துள்ளது.
சமீபத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜூலை மாதம்தான் பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டார்
பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் பதவிகளை உருவாக்க அரசு அனுமதி அளித்தது. . எனவே, இதுவரை கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றைக் கவனித்து வந்த சந்திர மோகனுக்கு பதில் மங்கத் ராம் சர்மா அந்த பொறுப்பிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்தான் அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் ஆகியவை நடந்திருப்பதை தொடர்ந்து, மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றமும் நடக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி!












Click it and Unblock the Notifications