அவர் சரியில்லை! மேஜைக்கு வந்த ரிப்போர்ட்.. அதி முக்கிய அதிகாரியை தூக்கி அடிக்கும் ஸ்டாலின்! ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தயாரித்து வருகிறாராம். இதில் மிக முக்கியமான ஒரு அதிகாரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பல அதிகாரிகள் தமிழ்நாட்டில் மாற்றப்பட்டனர். உதாரணமாக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டார்.

அதிகாரிகள் மாற்றம்: பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் பதவிகளை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. . எனவே, இதுவரை கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றைக் கவனித்து வந்த சந்திர மோகனுக்கு பதில் மங்கத் ராம் சர்மா இதை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை பி.சந்திர மோகன் கவனிப்பார். பொதுப்பணித் துறையை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
மணிவாசன் நீர்வளப் பொறுப்பாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளராக இருந்த பி செந்தில் குமார் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட துறைகளின் பிற அதிகாரிகள்: ஆர்.செல்வராஜ் (தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு), ஏ ஜான் லூயிஸ் (அரசு கேபிள் டிவி முதல் சமூக பாதுகாப்புத் திட்டம் வரை) மற்றும் எம்.விஜயலட்சுமி (வீடு மற்றும் நகர்ப்புறத்திலிருந்து) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் வளர்ச்சி) ஆவர்.
முக்கிய அதிகாரி மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தயாரித்து வருகிறாராம். இதில் மிக முக்கியமான ஒரு அதிகாரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரி.. ஆனால் கடந்த சில மாதங்களாக முதல்வருடன் அவர் நல்ல இணைப்பில் இல்லை.
அந்த அதிகாரியின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தயாராகும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல அதிகாரிகளை மாற்ற உள்ளாராம். அதில் ஒரு அதிகாரியாக அந்த முக்கிய அதிகாரியின் மாற்றமும் இருக்கும் என்று தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications