கள்ளக்குறிச்சியில் ஸ்டாலின் கள ஆய்வு.. 2 லட்சம் பேருக்கும் நலத்திட்ட உதவி செய்யும் முதல்வர்!
சென்னை: கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி வந்துள்ள ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் உள்ள தோல் அல்லாத தொழிற்சாலையில் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் ஸ்டாலின், 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கள்ளக்குறிச்சிக்கு கள ஆய்வு பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று மேற்கொள்கிறாா். அங்கு ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

அதேபோல் 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். தொடந்து நாளை மறுநாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்கு செல்கிறாா். திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 631 கோடி 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வா் திறந்து வைக்கிறார்.
இங்கு ரூ.63 கோடி மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். முதல்வர் ஸ்டாலினின் பயணம் காரணமாக கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி வந்துள்ள ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் உள்ள தோல் அல்லாத தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications