பிரியாவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.10 லட்சம், வீடு-அரசு வேலை ஆணை வழங்கல்
சென்னை: சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா உயிரிழந்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (வயது 17). இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரியா தனியார் கல்லூரியில் படித்தபடியே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.
மேலும் கால்பந்து விளையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். இந்நிலையில் தான் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது.

மாணவி மரணம்
இதையடுத்து சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இறுக்கமாக கட்டு போடப்பட்டது. இதனால் ரத்தம் ஓட்டம் தடைப்பட்ட நிலையில் பிரியாவின் கால் வீக்கமடைந்து வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா உயிரிழந்தார்.

பெரும் சோகம்
பிரியா மீண்டும் உடல்நலம் தேறி கால்பந்து விளையாடுவார் என அவரது குடும்பத்தினர்கள், தோழிகள் நினைத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றிய விசாரணைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

தமிழக அரசு உதவி
இந்நிலையில் தான் இறந்த மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். அதோடு தற்போது பிரியாவின் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
இந்நிலையில் தான் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிகாரிகள் உடன் சென்றனர்.

நிவாரண உதவிகள்
இந்த வேளையில் பிரியாவின் குடும்பத்தின் நிலை பற்றி முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் கேட்டார். மேலும் பிரியா பெற்ற பதக்கங்கள், கோப்பைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து இழப்பீடாக ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த வேளையில் பிரியாவின் பிரச்சனை பற்றியும், அவர் பங்கேற்ற போட்டிகள் பற்றியும் குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலினிடம் கூறினார். அதோடு அரசு செய்த உதவிகளுக்கு பிரியாவின் பெற்றோர், சகோதரர்கள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications