டிசிஎஸ்-ல் 30000 ஊழியர்கள் பணிநீக்கம்? மேனேஜர்-க்கு வந்த ஷாக்கிங் ஈமெயில்.. Band D தெரியுமா உங்களுக்கு?
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தன் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேரை அதாவது சுமார் 30,000 பேரை படிப்படியாக பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் காக்னிசண்ட் நிறுவனமும் 15,000 முதல் 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் "குளோபல் ரீசெட் பிளான்" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை (HR) இந்நிறுவனத்தின் மேனேஜர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஒவ்வொரு அணியிலும் (team) சில ஊழியர்களின் பெயர்களை "பேண்ட் டி" (Band D) பிரிவில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேண்ட் டி என்பது மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கான பிரிவு. இந்தப் பிரிவில் சேர்க்கப்படுபவர்களுக்கு வேரியபிள் பே (Variable Pay) பெருமளவு குறைக்கப்படும். பல சலுகைகள் ரத்து செய்யப்படும். சமீபத்தில் வெளியிடப்பட்ட சம்பள உயர்வில் கூட சில ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படாமல் சம்பளம் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதேவிட முக்கியமாக பேண்ட் டி-யில் சேர்க்கப்படும் ஊழியர்கள் தற்போது அவர்கள் பணியாற்றி வரும் ப்ராஜெக்ட்டில் இருந்து நீக்கப்பட்டு, பிஐபி (PIP - Performance Improvement Plan) எனப்படும் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதில் சேர்க்கப்படும் ஊழியர்கள் பெருமளவில் பணி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.
இதே முறையை டிசிஎஸ் சில மாதங்களுக்கு முன்பு பயன்படுத்தியிருந்தது. ஆம், கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும், அப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் இதே பேண்ட் டி முறையில் பணியாற்றியவர்கள் தான். தற்போது 5 சதவீத ஊழியர்களை இதே வழியில் குறைக்க குறிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் "குளோபல் ரீசெட் பிளான்" என்ற பெயரில் பெரிய அளவிலான பணி நீக்கத்தைத் திட்டமிட்டுள்ளது. இரு நிறுவனங்களும் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகக் கூறுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத்தான்.
வாடிக்கையாளர்கள் இப்போது "ஒரு திட்டத்துக்கு எவ்வளவு நேரம் AI மூலம் முடிக்கப்படும்?" என்று கேட்கத் தொடங்கியுள்ளனர். முழுக்க மனித உழைப்பை நம்பிய திட்டங்கள் குறைந்து, தீர்வு சார்ந்த (Outcome-based) திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல பணிகளுக்கு குறைவான ஊழியர்களே போதுமானதாக உள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் குறைந்தது 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன. ஐடி துறையின் எதிர்காலம் குறித்து வல்லுநர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றும் இளம் பொறியாளர்கள் மற்றும் நடுத்தர ஊழியர்கள் பெரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேம்படுத்திகொண்டாலும் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
குறிப்பாக AI கருவிகளைப் பயன்படுத்தும் திறன், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றல் ஆகியவை இனி மிக முக்கியமானவையாக மாறியுள்ளன. ஆனாலும் பணி நிரந்தரமில்லை என்பதை தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. இன்று முக்கியமாக கருதப்படும் தொழில்நுட்பமும், அதன் திறனும் அடித்த 5-10 ஆண்டில் தேவையற்றதாக மாறுகிறது. இதற்கு காரணம் ஏஐ.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications