இரவில் எனக்கு வந்த தகவல்.. ஸ்டாலின் எச்சரித்த 4 நாளில் எ.வ வேலு வீட்டில் ரெய்டு.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வீடுகளில் ரெய்டு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் மீண்டும் ரெய்டுகள் தீவிரம் அடைந்துள்ளன.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

CM Stalin warned about raids juts 4 days before IT raid on the places belonging to EV Velu

எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது.இந்தியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் கட்டமைக்க முயற்சி செய்வதால் கோபம் , என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் எச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் மீண்டும் ரெய்டுகள் தீவிரம் அடைந்துள்ளன. சமீபத்தில்தான் இந்த ரெய்டுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளாராம். அதில், லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள். கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள்

CM Stalin warned about raids juts 4 days before IT raid on the places belonging to EV Velu

என்ன சொன்னார்?: எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள். நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள்.

இதனால் முக்கியமான முடிவுகளை டாப் சீக்ரெட்டாக எடுங்கள். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் முக்கியமான முடிவுகளை முடிந்த அளவு ரகசியமாகவே எடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம். அதன்படியே தற்போது ரெய்டும் நடப்பதால்.. ஏற்கனவே இதற்கு அமைச்சர்கள் ரெடியாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+