உடைந்த குரல்.. கலங்கிய முதல்வர் ஸ்டாலின்.. உளவுத்துறை ரிப்போர்ட்டில் இருந்தது என்ன? பின்னணி
சென்னை: பெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் முதல்வர் ஸ்டாலினை மிகவும் கவலையடைய வைத்திருக்கிறதாம். குறிப்பாக, வட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் துயரங்களையும் அறிந்து ரொம்பவே கவலைப்பட்டுள்ளார்.
தனது கவலையை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்; அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!, என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று போஸ்டும் செய்திருந்தார்.
போனில் பேசிய அமைச்சர்: நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை தொடர்புகொண்டு திருவண்ணாமலை மாவட்ட நிலவரங்களை கேட்ட ஸ்டாலின், பாறை உருண்டதில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் பலியான துயரத்தை எ.வ.வேலு சொன்னதைக் கேட்டு விக்கித்துப்போயிருக்கிறார். அவரது குரல் உடைந்து போனது.
இதனை உதயநிதியிடம் சொல்லி, ''தலைவர் இந்தளவுக்கு கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. 7 பேர் மரணம், தலைவரை ரொம்பவே கஷ்டப்படுத்தியிருக்கிறது'' என்று கூறி அழுதுள்ளார் எ.வ.வேலு. இதற்கிடையே, சென்னையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போல வட தமிழகத்தில் எடுக்கவில்லை என்கிற மக்களின் கோபம், குற்றச்சாட்டுகளாக வெடித்துக் கொண்டிருப்பதை முதல்வருக்கு நோட் போட்டுள்ளது உளவுத்துறை.
பெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு உடனடியாக 2,000 கோடியை ரிலீஸ் செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு அவசர கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் நிலையில், மாவட்ட கலெக்டர்களிடமிருந்து வரும் வெள்ள சேத நிலவரங்களைக் கணக்கிட்டால் நிவாரணத் தொகை மிக கூடுதலாக இருக்கிறது. இன்னும் முழுமையான கணக்கெடுப்புகளை நடத்தி கலெக்டர்கள் ரிப்போர்ட் அனுப்பி வைக்கும் போதுதான் ஒட்டுமொத்தமாக எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கணக்கிட முடியும் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், எவ்வளவுத் தொகை கேட்டாலும் அதில் 25 சதவீதத்தைக் கூட மத்திய அரசு கொடுக்காது என்கிற விரக்தியும் தமிழக நிதித்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
பிரதமருடன் பேச்சு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதில், மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications