“அலப்பற கெளப்புறோம்” மோடில் ஸ்டாலின்.. பரபர பணிகளுக்கு இடையே ‘ஜெயிலர்’ பார்த்து ரசித்த முதல்வர்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தை சென்னை இசைகல்லூரியில் அமைந்துள்ள தாகூர் திரையரங்கில் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பல மொழி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பு என்றதுமே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாதி அதிகளமாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி முத்துவேல் பாண்டியனாக ரஜினி மாஸ் காட்டி இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். தனது முந்தைய படமான பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால் ரசிகர்களால் மோசமான விமர்சனத்திற்கு உள்ளான நெல்சன் இந்த படத்தில் ரஜினிகாந்த்தை பார்த்துப் பார்த்துச் செதுக்கி, ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறாராம்.
ஜெயிலர் திரைப்படத்தை முதல் நாளன்றே பிரபலங்கள் பலரும் திரையரங்கில் பார்த்து ரசித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'ஜெயிலர்' திரைப்படத்தை சென்னை இசைகல்லூரியில் அமைந்துள்ள தாகூர் திரையரங்கில் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். காலையில், மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகனின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்து, மாலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024க்கான இலச்சினை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்டு உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்பிறகு, இரவு உணவை முடித்துக்கொண்டு, ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படம் பார்க்கச் சென்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினுக்காக சென்னை இசைகல்லூரியில் அமைந்துள்ள தாகூர் திரையரங்கில் ஸ்பெஷலாக திரையிடப்பட்டுள்ளது 'ஜெயிலர்' திரைப்படம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications