கவனிச்சீங்களா! "அதிமுக ஒருங்கிணைப்பாளர்" ஓபிஎஸ்.. கொரோனா வாழ்த்தில் அழுத்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் நலம்பெற வாழ்த்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் ஒற்றைத் தலைமை மோதல் விவகாரம் பூதாகரம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
இதனை தொடர்ந்து கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
இதற்கு பதிலடி தரும் விதமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். செங்கோட்டையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரை முதல் கட்டமாக நீக்கிய ஓ.பன்னீர்செல்வம் நேற்று மேலும் 44 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

கொரோனா பாதிப்பு
பொதுக்குழுவில் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது என அனைத்து முடிவுகளையும் ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்து இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த நகர்வுகளை ஒ.பன்னீர்செல்வம் எடுத்து வந்த நிலையில், நேற்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

முதலமைச்சர் வாழ்த்து
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று முதலமைச்சர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications