“திராவிட லுங்கி”.. கைலி கட்டி அரசாங்கத்தையே நடத்துவோம்.. ஸ்டாலின் படத்துடன் வைரலாகும் மதிமாறன் பதிவு
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், காணொளிக் காட்சி வாயிலாக உரையாடி மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் லுங்கி அணிந்தபடி பணியாற்றும் புகைப்படம் வெளியான நிலையில், எழுத்தாளர் மதிமாறன், "திராவிட லுங்கி" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். தினந்தோறும் தலைமைச் செயலகம், அறிவாலயம், வெளி மாவட்ட சுற்றுப் பயணம் என சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாலும் மக்கள் நலத் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என இன்று மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளோடு மருத்துவமனையில் அமர்ந்தபடி காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
மக்கள் பணியில் முதல்வர் ஸ்டாலின்
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்களுடன் நேரடியாக உரையாடினார். இந்த ஆய்வின் போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்ற பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
இதுதொடர்பான முதல்வரின் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை ஏற்ற உதவியாக கையில் போடப்பட்டிருக்கும் வென்ஃப்லான் பேண்டேஜூடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது கையில் அந்த ஊசி போட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்து இடுகிறார்.
லுங்கி + கட்டம் போட்ட சட்டை
முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்திருப்பார், சில நேரங்களில் வெள்ளை சட்டையும் பேண்ட்டும் அவர் அணிந்திருப்பார். வீட்டில் ஓய்வில் இருக்கும்போது லுங்கி அணிந்திருப்பார். இன்று மருத்துவமனையில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தில் கைலி, கட்டம் போட்ட சட்டை, தோளில் துண்டுடன் முதல்வர் காட்சி அளிக்கிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடி, முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணிகளில் ஈடுபடும் புகைப்படத்தைப் பதிவிட்டு, 'திராவிட லுங்கி' எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் மதிமாறன். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மதிமாறன் ட்வீட்
மதிமாறன் வெளியிட்டுள்ள பதிவில், "ஆரியத்திற்கு லுங்கி மீது எப்போதுமே தீண்டாமை. அதை அணிபவர்கள் மீதும் வெறுப்பு. ஆனால், ஓய்வு நேரத்தில் வீட்டில் மட்டுமல்ல, மருத்துவமனையிலேயே லுங்கி கட்டி தான் அரசாங்கத்தையே நடத்துவோம். பெரியார்+கலைஞர்+தளபதி = திராவிட லுங்கி💕 " எனத் தெரிவித்துள்ளார்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications