உங்களால் கருவானேன்.. நீங்கள் காட்டிய பாதையில் பயணிக்கிறேன்.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் ட்வீட்
சென்னை: உங்களால் கருவானேன், உங்களால் செதுக்கப்பட்டேன், நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன் என தந்தையர் தினத்தையொட்டி கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தந்தையர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ஹீரோ. அதிலும் பெண் குழந்தைகள் தனது தந்தையை ஹீரோவாகவே பார்க்கிறார்கள்.

தாய் கருவை 10 மாதம் சுமந்து இந்த உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துகிறாள். அது போல் தந்தையும் நமக்கு பாசத்தையும் பண்பையும் கற்றுக் கொடுத்து நமக்கு கல்வியையும் நற்கருத்துகளையும் போதனை செய்து நல்ல மனிதனாக இந்த பூமியில் வாழ வைக்கிறார்.
தந்தை சரியில்லாத எத்தனையோ குடும்பங்கள் திக்குத்தெரியாமல் இருந்து வருகின்றன. அவர்களை தாய்தான் இன்றளவும் காப்பாற்றி வருகிறார். அது போல் தான் பட்ட கஷ்டத்தை தனது மகனோ மகளோ படக் கூடாது என்பதிலும் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று ஏழை தந்தைகளின் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜீனியராகவோ அவர்கள் விரும்பும் கனவுகளை அடைகிறார்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலை கற்றுக் கொடுத்தது அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின்தான். அப்படிப்பட்ட தந்தையை போற்றி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் கவிதை எழுதியுள்ளார். அதில் உங்களால் கருவானேன், உங்களால் செதுக்கப்பட்டேன், நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன், உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்; நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன் என குறிப்பிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் அண்ணா, கருணாநிதி முன்பு ஸ்டாலின் நிற்கிறார்.
கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்ததினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ நலத்திட்ட உதவிகளை செய்ய கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளின் போது முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
உங்களால் கருவானேன்.
— M.K.Stalin (@mkstalin) June 18, 2023
உங்களால் செதுக்கப்பட்டேன்.
நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.
நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்.#FathersDay#கலைஞர்100 pic.twitter.com/kjj75AGuep
அதில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என கூறியிருந்தார். அதன்படி தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டடங்களைக் கொண்ட இந்த மருத்துவமனை 1000 படுக்கை வசதிகளுடன் 230 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. தந்தையர் தினத்தையொட்டி நிஜ வாழ்வு ஹீரோக்களுக்கு பலர் வாழ்த்துகளையும் பரிசுகளையும் கொடுத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications