புதிய தலைமைச் செயலக வழக்கு.. குறுக்கே வந்த ஜெயக்குமார் மகன்! ஐகோர்ட்டில் ஸ்டாலின் தரப்பு ஆட்சேபனை
சென்னை: புதிய தலைமை செயலக கட்டடம் தொடர்பான மேல்முறையீடு வழக்குகளில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தனை இணைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபனை தெரிவித்து உள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தை கலைத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கும்படியும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படியும் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த மேல்முறையீடுகளை திரும்பப்பெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னை இணைக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயவர்த்தன் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுரேஷ்குமார், மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, லஞ்ச ஒழிப்பு துறையின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தார்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரை போலவே இருந்ததால், ஜெயவர்த்தனின் புகார் முடித்து வைக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தன் புகாரில் முறையாக விசாரணை நடத்தாமல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற அரசு ஆர்வம் காட்டுவதாலேயே, தனது தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த நிலையில் அதை ஏற்காமல் நீதிமன்றம் தாமதிக்க முடியாது என்றும், இந்த வழக்கில் ஜெயவர்த்தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி, கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜராகி, ஆணையத்தை கலைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை இந்த அரசு ஏற்றுக்கொள்வதால், மேல்முறையீடு வழக்குகளை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாகவும், இதில் தன்னை இணைத்துக் கொள்ள ஜெயவர்த்தனுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த பிறகு வழக்கு விசாரணையை பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஜெயவர்த்தன் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு உள்ள உரிமை குறித்த வாதங்களை அனைத்து தரப்பும் முன்வைக்க உத்தரவிட்டு உள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications