தயாளு அம்மாள் எப்படி இருக்கிறார்? தொடரும் சிகிச்சை! அப்பல்லோவுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு இன்று இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயோதிகம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை அடுத்து அவர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தாயை பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போதிலிருந்தே தயாளு அம்மாள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் வயோதிகம் காரணமாக சில அசௌகரியங்களை சந்தித்து வந்தார். சில ஆண்டுகளாகவே அவர் பொதுவெளியில் வருவதில்லை.

கடந்த ஆண்டு மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மரணமும் தயாளு அம்மாளை புரட்டி போட்டது. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது 72-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று வந்தார்.
இந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தயாளு அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது தாயாரைக் காண மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார். தற்போது 2ஆவது நாளாக தயாளு அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனது தாயின் உடல்நிலை குறித்து கேட்டறிய மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications