விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, துரைவைகோ.. ஸ்டாலின், வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறலாம். தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றனர். ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார். அதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்தார். முன்னதாக துரைவைகோ விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார்.
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் நேற்று முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியவுடனே விஜய் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு சென்று அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார். நேற்று முதலமைச்ராக பதவியேற்ற பிறகு விஜய் பெரியார் திடலுக்கு சென்று திக தலைவர் வீரமணியை சந்தித்து பேசினார்.

விஜய் - ஸ்டாலின் சந்திப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, ஸ்டாலின் வீட்டிற்குச் சென்ற விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றார்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற மக்களுக்கு வழங்கிய உரையில், தமிழ்நாடு அரசின் கஜானா காலியாகிவிட்டது. விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணியை தொடங்கவுள்ளேன் என்று கூறியிருந்தார். விஜய் தன்னுடைய முதல் உரையிலேயே திமுகவை விமர்சித்திருந்தார். பதிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு, அவர் வைத்த குற்றச்சாட்டுக் நீண்ட விளக்கமும் அளித்திருந்தார்.
திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி இருக்க போவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் நேரடியாக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் விஜய் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் விஜய்க்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, ஸ்டாலின், விஜய், உதயநிதி ஆகியோர் பேசினர்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் வாழ்த்து பெறுவதற்காக முதல்வர் விஜய் அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது, வைகோ வீட்டிற்கு வந்த விஜய்யை துரைவைகோ ஆரத்தழுவி வரவேற்றார். அவருக்கு துரை வைகோ மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
தொடர்ந்து, முதல்வர் விஜய் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், விஜய்யை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வைகோ. அப்போது, பெருமகிழ்ச்சியடைந்த வைகோ முகம் முழுக்க புன்னகையுடன் விஜயின் கையைப் பிடித்தபடியும், மக்களுக்கு கையசைத்தபடியும் கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
-
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications