தமிழகத்தில் டெங்கு தடுப்பு தீவிரம்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழையை முன்னிட்டு கடலோர, டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஆணையிட்டார்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

cm-vijay-directs-officials-to-intensify-dengue-prevention-and-monsoon-preparedness-measures

டெங்கு காய்ச்சல்

இந்தக் கூட்டத்தில், டெங்கு காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டவாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, நோய் அதிகரித்துவரும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் முதலியவற்றைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை

கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, Aedes கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முதல்வர் உத்தரவு

மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதோடு, தேவையான ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், திரவ சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இப்பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+