சிஎம் விஜய்க்கு பலப்பரிட்சை.. 2 தொகுதிகளில் இடைத் தேர்தல்! வேட்பாளர்கள் யார்? யார்? ரெடியான லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் மதுராந்தகம் - தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியமாக குதிரை பேர குற்றச்சாட்டு விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது.

CM Vijay

சட்டசபை தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

தமிழக வெற்றி கழகம்

தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

முதல்வர் விஜய்

முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர்.

இடைத் தேர்தல்

இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் தற்போது தாராபுரம் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்கள் யார்?

தேர்தல் வழக்குகள் காரணமாக மற்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளார் சிஎம் விஜய். இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் யார் வேட்பாளராக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் களமிறங்கப் போகிறார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

மதுராந்தகம்

ஏற்கனவே இருவரும் ராஜினாமா செய்த போதே மீண்டும் இடைத்தேர்தலில் நின்றால் வெற்றி பெற வைக்கப்படும் என விஜய் தரப்பு உறுதியளித்ததால் தான் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவுமே களமிறங்குவார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் சொல்கின்றனர்.

அதிமுக போட்டி?

இவர்கள் இருவருமே கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்களா? அல்லது இடைத்தேர்தலை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மறுபுறம் திமுக வலுவான வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டு இருக்கிறது. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலகி இருக்கும் நிலையில் திமுக தலைமை தீவிரமாக ஆராய்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வார்கள் என்கின்றனர் திமுகவினர். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் வேலைகள் அடுத்தடுத்து சூடி பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+