பட்டினப்பாக்கத்தில் தான் தலைமைச் செயலகம்.. உறுதியாக இருக்கும் சிஎம் விஜய்! அமைச்சர் சிடிஆர் சூசகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இப்பல்வேறு அரசியல் கட்சிகளும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தை விட்டால் மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தான் தலைமைச் செயலகம் கட்ட முடியும் எனவும், அப்படி அங்கு மாற்றினால் அதிகாரிகள் பயணம் செய்யவே அரை நாள் ஆகும் எனவும், மக்கள் பாதிப்படையாத வகையில் அங்கு தலைமைச் செயலகம் கட்டப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சிரமம் ஏற்படுகிறது. இதனால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

Vijay

நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்

இதற்கிடையே அங்கு தலைமைச் செயலகம் அமைக்க பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டுகின்றனர். புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம்

அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்

மீனவர்களின் எதிர்ப்பை மீறி அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் போராட்டத்தில் குதிப்போம் என மீனவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு ஆதரவாக திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கி உள்ளன. மேலும் விஜய் அரசுக்கு ஆதரவளித்து வரும் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிடிஆர் நிர்மல் குமார்

இதற்கிடையே அந்த இடத்தில் தான் தலைமைச் செயலகம் வரும் என்பதை சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார். இது தொடர்பாக பேசி உள்ள அவர், தலைமைச் செயலகத்தை சுற்றி தான் அரசு அலுவலகங்கள் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. தற்போது பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அனைத்து அதிகாரிகளும் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

மகாபலிபுரம்

பட்டினப்பாக்கத்தை தவிர்த்து விட்டால் மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தான் கட்டப்படும். அப்படி அங்கு மாற்றப்பட்டால் அதிகாரிகள் வந்து செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். கிட்டத்தட்ட அரை நாள் பயணங்களுக்காகவே செலவிட வேண்டிய நிலை ஏற்படும். தற்போது கூட உயர்நீதிமன்றம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே தான் புதிய உயர் நீதிமன்றம் அமைக்க 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்

தற்போது அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே சிலர் போராடுகிறார்கள். மக்கள் பாதிப்பு அடையாத வகையில் முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார்" என கூறியிருக்கிறார். இதன் மூலம் பட்டினப்பாக்கத்தில் தான் தலைமைச் செயலகம் வரும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+