முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்? மதுராந்தகத்தில் நாளை 5 மணிநேரம் ரோடுஷோ - மேல்மருவத்தூரில் தரிசனம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தம் சட்டசபை இடைத்தேர்லையொட்டி முதல்வர் விஜய் நாளை 5 மணிநேரம் ரோடுஷோ மேற்கொள்ள உள்ளார். அதேபோல் மேல்மருவத்தூர் கோவிலில் தரிசனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோடுஷோ மட்டும் 5 மணிநேரம் என்பதால் முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

cm-vijay-hold-5-hour-roadshow-in-maduranthakam-tomorrow-for-tvk-candidate

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 9 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் களமிறங்கி உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானார். தற்போது தவெக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முதல்வர் விஜய் விஜய் நாளை (அக்டோபர் 2) மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார். மொத்தம் 5 மணிநேரம் வரை ரோடுஷோ மேற்கொள்ள உள்ளார். மாலை 4 மணிக்கு ரோடுஷோவை தொடங்கும் முதல்வர் விஜய் இரவு 9 மணி வரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடுஷோ செல்கிறார்.

இந்த ரோடுஷோ மாமண்டூரில் தொடங்குகிறது. பிறகு படாளம், கருங்குழி அய்யனார்கோயில், பெரும்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக சென்று அச்சரப்பாக்கத்தில் நிறைவடைகிறது.இந்த சமயத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் முதல்வர் விஜய் வழிபாடு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யாதவர் விஜய். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டனர் என்றும் சொன்னவர் விஜய். ஆனால் இடைத் தேர்தலுக்காக அவர் போடும் உழைப்பை பார்த்தால், போட்டி கடுமையாக இருப்பது உறுதியாக தெரிகிறது.

பொதுவாக பிரதமர் உள்பட பிற மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் ரோடுஷோ செல்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் ஒரு மணிநேரம், 2 மணிநேரம் வரை மட்டுமே அவர்கள் ரோடுஷோ செல்வார்கள். ஆனால் முதல்வர் விஜய் 5 மணிநேரம் என்று திட்டமிட்டு இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

இதனால் முதல்வர் விஜய் தோல்வி பயத்தில் 5 மணிநேர ரோடுஷோவை திட்டமிட்டுள்ளதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளையில் தவெகவினரோ, முதல்வர் விஜய் மதுராந்கம் சட்டசபை இடைத்தேர்தல் வெற்றியை மிகவும் முக்கியமாக பார்க்கிறார். இதனால் தான் அவர் 5 மணிநேரம் ரோடுஷோ செல்வதாக கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+