அந்த நாளுக்குத் தான் வெயிட்டிங்.. நண்பர் அஜித்தை சந்திக்கும் சிஎம் விஜய்! லண்டன் ட்ரிப்பில் சேஞ்ச்?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற 10-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து துபாய்க்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். துபாயில் வருகிற 11-ஆம் தேதி நடிகர் அஜித்தை சந்திப்பதாகவும், பின்பு அங்கிருந்து லண்டன் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை திரட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். தொடர்ந்து தொழில்துறை சார்பில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க திமுக ஆட்சிக் காலத்திலேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் அந்த நிறுவனங்களை சந்தித்து விரைவில் வேலைகளை துவக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 2036இல் 1.5 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்ற இலக்கை நிர்ணயத்து அதனை நோக்கி மிழக அரசு பயணித்து வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட்டு, சுமார் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு சொல்லி உள்ளது.
தமிழக முதல்வர் விஜய்
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்துடன் முடிந்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 10-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார் என சொல்லப்பட்டது.
அமைச்சர் கீர்த்தனா
அதற்கு முன்னதாக தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவான் சென்று செமி கண்டக்டர், ஏ.ஐ உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களை சந்தித்து பேச உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் தள்ளி வைக்கப்படலாம் என அரசுத் துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சொன்னது போல 10 தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல்வர் விஜய் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இங்கிலாந்து பயணம்
இந்த நிலையில் அதில் சிறு மாற்றம் நடைபெற இருக்கிறது. 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வரும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் 11ஆம் தேதி தமிழகம் வருகிறார். அவரை சந்திப்பதற்காக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் அஜித் சந்திப்பு
அதே நேரத்தில் மற்றொரு தகவலும் உலாவுகிறது முதலமைச்சர் விஜய் திட்டமிட்டபடி லண்டன் பயணம் மேற்கொள்வார் எனவும், ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாக துபாய் செல்கிறார் என்கின்றனர். அதாவது 10ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல்வர் விஜய் 11ஆம் தேதி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்தை சந்தித்து பேசுகிறார். அதற்கு பிறகு அங்கிருந்து லண்டன் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை திரட்டுவார் எனவும் தகவல்கள் சொல்கின்றன.


Click it and Unblock the Notifications
