தூத்துக்குடி ஸ்டெர்லைட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரைப்படி, கூடுதல் நிவாரணமாக மொத்தம் ரூ.5.25 கோடி வழங்க தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

CM Vijay

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, கூடுதல் நிவாரணத் தொகையாக ரூ.5.25 கோடியை உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் ஏற்கனவே வழங்கட்டுள்ள நிலையில், முறையே கூடுதலாக ரூ.25 லட்சம், ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டனர். அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி வழங்கப்படவுள்ளது.

கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.10 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+