ராஜினாமா செய்தார் விஜய்.. முதல்வராக பதவியேற்ற கையோடு திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் விஜய் இந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதற்கிடையே இப்போது அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் தான் விஜய் இன்று முதல்வராகப் பதவியேற்றார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வென்றிருந்தார். முதல்வராகப் பதவியேற்ற விஜய், இப்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிலையில், அதற்கு முன்னதாக விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications