கொளத்துருக்கு நாளை செல்லும் முதல்வர் விஜய்.. பள்ளி குழந்தைகளுக்கு கேக்! திடீரென பிளானை மாற்றிய சிஎம்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை கொளத்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு கேக் வழங்குகிறார். நாளை மறுநாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுக்க உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கப்படுகிறது. இதனை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் நாளை கொளத்தூர் செல்கிறார்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் (நவம்பர் 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டது.

மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எலைம்ட் நேச்சுரல், ட்ரீம் பேக், பிரிட்டானியா, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன. கேக் துண்டுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதல் முறையாக குழந்தைகள் தினத்திற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து கேக் துண்டுகள் வழங்கப்படுவதால் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.
கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் தோல்வி அடைந்த தொகுதியான கொளத்தூரில் முதல்வர் விஜய், குழந்தைகளுக்கான கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு தற்போது உடல் நல பாதிப்பால் சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளதால், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. முதல்வர் விஜய் நாளை கொளத்துர் தொகுதிக்கு வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக முதல்வர் விஜய் அம்பாசமுத்திரத்தில் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்க இருந்ததாகவும் இதற்காக அவர் நெல்லை வர இருந்ததாகவும் தகவல் வெளியாகின. இதற்கான ஏற்பாடுகள் கூட தீவிரமாக நடந்து வந்த நிலையில் இறுதியில் விஜய் இந்த பிளானை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. திடீரென பிளான் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.




Click it and Unblock the Notifications
