Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டு வந்தது CMOTamilNadu ட்விட்டர் பக்கம்.. காணாமல் போனது @OfficeOf_EPS டுவிட்டர் பக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சருக்கான பிரத்யேக ட்விட்டர் பக்கமான @CMOTamilNadu பக்கம் மீண்டும் வந்துள்ளது. அதேநேரம் @CMOTamilNadu பக்கத்தை @OfficeOf_EPS என்று மாற்றியதை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

Recommended Video

    விதிமீறல் நடைபெற்றதாக புகார்.. @CMOTamilNadu ட்விட்டர் பக்கம் முடக்கம்

    ஒவ்வொரு மாநில முதல்வர் பெயரிலும் தனியாக ட்விட்டர் பக்கத்தில் @CMO என்ற பெயருடன் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது. உதாரணமாக @CMOTamilNadu, @CMOkerala என தனித்தனியாக மாநில முதல்வர்கள் பெயரில் ட்விட்டரில் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது.

    இதை முதல்வர்கள் அரசியலுக்காக பயன்படுத்துவதில்லை. அரசின் செயல்பாடுகளை பட்டியலிடுவதற்காக பயன்படுத்துகின்றனர். முதல்வராக அவர்களின் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் கணக்கு

    தமிழ்நாடு முதலமைச்சர் கணக்கு

    இதன்படி எந்த அரசியல் கட்சி தலைவர் முதல்வராக வந்தாலும் அவர்கள் பெயரில் ட்விட்டர் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பிரத்யேக ட்விட்டர் ஹேண்டிலை முன்னாள் முதல்வர் பழனிசாமி நிர்வகித்து வந்தார். அதில் 12 லட்சம் (1.2அ) பாலோயர்கள் இருந்தனர்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது பெயரிலும் தனி அக்கவுண்ட் வைத்துள்ளார். 272.9K பாலோயர்கள் பின்பற்றி வருகிறார்கள். இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது பெயரில் தனி ட்விட்டர் கணக்கு வைத்துள்ளார். இதை 2.1M (மில்லியன்) மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

    திமுக வெற்றி

    திமுக வெற்றி

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற முக ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் என்று மாற்றினார்

    எடப்பாடியார் கணக்கு நீக்கம்

    எடப்பாடியார் கணக்கு நீக்கம்

    இந்நிலையில் முன்னாள் முதல்வராக மாறிய எடப்பாடி பழனிசாமி நிர்வகித்து வந்த @CMOTamilNadu பக்கம் விதிமீறலுக்காக முடக்கப்பட்டது. அதேநேரம் முதல்வருக்கு வழங்கப்பட்ட டுவிட்டர் கணக்கை @OfficeOf_EPS என்று தனது பெயரில் எடப்பாடி பழனிசாமி மாற்றினார். கடந்த 4 நாட்களாக இயங்கி வந்த @OfficeOf_EPS ட்விட்டர் பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அது அப்படியே பழையபடி @CMOTamilNadu என்று வந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+