கோயம்பேடு -ஆவடிக்கு சர்ரென பறக்கலாமே! மெட்ரோ ரயில் பணிகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட CMRL நிர்வாகம்!
சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டரை கோரியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் பெருக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரங்களை கூட கடக்க மணிக்கணக்கில் ஆகும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும் வாகன புகையால் காற்று மாசுபடுகிறது.

இதனால் காலநிலை மாற்றத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கோயம்பேட்டிலிருந்து சென்னை புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2-ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுச்சேரி வரையிலான 3ஆவது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தை புதிய விமான நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பரந்தூர் வரை நீட்டிக்கவும் மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5ஆவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை 16.07 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2028ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் டெண்டருக்கான ஆவணங்கள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சிஎம்ஆர் நிர்வாகத்தின் இணையத்தளத்தில் இருக்கும். டெண்டர் புள்ளிகளை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் மார்ச் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது.
தமிழக பட்ஜெட்டிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ 12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கோயம்பேட்டிலிருந்து ஆவடிக்கு சர்ரென பறக்கலாம்!
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications