சென்னை தி நகருக்கு எப்போது மெட்ரோ சேவை வரும்? வெளியான முக்கிய தகவல்.. நோட் பண்ணிக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி நகருக்கு எப்போது மெட்ரோ சேவை வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2027 மார்ச் மாதம் இந்த சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட உள்ள மெட்ரோவிற்கான டிபிஆர் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னையில் இதனால் மெட்ரோ நீளம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பட்டாபிராமில் ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தியக்கூறு ஆய்வு வெற்றி பெற்றால், ஒரு மாதத்திற்குள் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

metro

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கோயம்பேடு முதல் ஆவடி வரை முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை பட்டாபிராம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்மொழியப்பட்ட இந்த நீட்டிப்பு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நகரின் புறநகர் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு பட்டாபிராம் பகுதியில் வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மெட்ரோ விரிவாக்கம்:

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான நீளம் 16.1 கிமீ ஆகும், இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். திட்டத்திற்கான கட்டுமான செலவு சுமார் ரூ. 6,500 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த விரிவாக்கத்தில் சுமார் 15 ஸ்டேஷன்கள் அமைக்கப்படும், மேலும் ஆவடியில் அல்லது பட்டாபிராமில் வெளிவட்ட சாலைக்கு (ORR) அருகில் உள்ள காலி நிலத்தில் மெட்ரோ டிப்போ கட்டப்படும். கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது மொகப்பையர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நகரின் புறநகர் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதோடு போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​சென்னையில் 54 கி.மீ., தூரத்திற்கு இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் உள்ளன, தினமும் 3.20 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், 35.53 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், 2024 இல் மட்டும் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ பாதி பணிகள் நிறைவு:

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது, இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள (உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால்.,) போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+