சென்னைக்கு அக்டோபர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது.. கோடைவெயிலுக்கு நடுவே குட்நியூஸ் கூறிய CMWSSB
சென்னை: கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் கூட சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு என்பது வராது என சென்னை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மேலும் வழக்கத்தை விட மார்ச் மாதம் முதலே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் தற்போது பல இடங்களில் வெப்பஅலை என்பது வீசி வருகிறது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் வெயில் என்பது அதிகரித்துள்ளது. ஏரிகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.
இதனால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல்கள் பரவின. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டது. இதனால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகியவை உள்ளன.
இங்கிருந்து எடுத்து வரப்படும் நீர் 5 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 111 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் அக்டோபர் மாதம் வரை தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக் குடிநீர் வழங்கும் ரேிகளின் தற்போதைய நீர் இருப்பை கணக்கிட்டு இந்த அறிவிப்பு என்பது வெளியிப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications