“நோ டென்சன்”.. வெள்ளை லிஸ்டுதான்! தென்னை உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டித்தில் கோவை, ஈரோடு, நாமக்கல். கரூர், திண்டுக்கல். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. முன்னதாக, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளின் வகைப்பாட்டின்படி, தென்னை மட்டையில் இருந்து பொருட்கள் தயாரிப்பது "வெள்ளை" பிரிவின் கீழ் வருவதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் கடந்த 2021 செப்டம்பரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் தென்னை நார் அலகுகளை மறு வகைப்படுத்துவது தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார். தென்னை நார் தொழிலை உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் வகைப்படுத்துமாறு பல்வேறு தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.
இதற்கிடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தென்னை நார் தொழிலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்காக வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு தென்னை நார் தொழிற்சாலைகளுக்கான மாசுக் குறியீட்டு மதிப்பெண்ணை வகுத்தது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 'தென்னை நார் உடைத்தல்/டி-ஃபைபர் /பித் பதப்படுத்துதல் தொழில்' ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது. தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளை வெள்ளை வகையில் தொடருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை நிற வகைப்பாட்டில் தொடர்கிறது. தற்போது, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஜூலை 2023-ல் தொழில்துறைகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை வகைகளாக வகைப்படுத்துவது தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
இதில் தென்னை நார் உற்பத்தி (ஈரமான / சாயம் பூசும் செயல்முறை) ஆரஞ்சு பிரிவின் கீழும், தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை) பச்சை பிரிவின் கீழும், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி வெள்ளை பிரிவின் கீழும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமையில் நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா ஸாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி, தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவைகளுக்கு தீர்வுகாண அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய நிலையில் இத்தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023 ல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது அனைத்து சங்கங்களும் ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications