Cognizant வேலைவாய்ப்பு.. சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் பணி நியமனம்..ஏப்ரல்28 கடைசி நாள்
சென்னை: பிரபல காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 28ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
பிரபல ஐடி நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Fresher hiring for 2025 Engineering Graduates (GenC Next, GenC Pro & GenC) என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த பணிக்கு 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்ட பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பிரிவில் லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் GenC பணிக்கு என்றால் கோடிங் ஸ்கில்ஸ், ஃபுல் ஸ்டாக் எபிலிட்டி இருக்க வேண்டும். அதேபோல் ஜாவா, C#, வெப் டெக்னாலஜிஸ் (எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட்), பைத்தான், ஆரக்கள், எஸ்க்யூஎல்/பிஎல்எஸ்க்யூஎல், கிளவுட் (ஏடபிள்யூஎஸ், அஜூர் மற்றும் ஜிசிபி) தெரிந்திருக்க வேண்டும். GenC என்றால் சைபர் செக்யூரிட்டி, ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ், முல்சாப்ட், பெகா, சாப் ஏபிஏபி, எஸ்ஏபி பேசிஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2, டிப்ளேமா, யுஜி மற்றும் பிஜி உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. எந்த லோகேஷன் என்றாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு பதிவு செய்வோருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் இருக்க வேண்டும்.
அதேபோல் கல்லூரி ஐடி கார்டு இருந்தால் அதையும் அப்லோட் செய்ய வேண்டும். மேலும் கல்லூரி/பள்ளி, யுஜி மற்றும் பிஜி மார்க்சீட் மற்றும் புரோவிஷனல்/டிகிரி சர்ட்டிபிகேட் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பான் கர்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பெயர் விபரம் சரியாக இருக்க வேண்டும். வோட்டர் ஐடி/பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.75 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 28ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்ளிட்ட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் தமிழ்நாட்டின் சென்னை, கோவையிலும் பணி செய்யும் வாய்ப்பு என்பது கிடைக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications