ஆட்டுக்குட்டியையே "உற்றுப்பார்த்த" அண்ணாமலை.. என்னாச்சு தெரியுமா? மலைத்த கோவை பல்லடம்.. பூரித்த பாஜக
சென்னை: கோவையில் மட்டன் பிரியாணி தயாராகி கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும், முறியடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பல்லடத்தில் நேற்று என்ன நடந்ததது?
தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழகத்திலேயே பாஜகவுக்கு அதிக ஆதரவு இருப்பது கோவை என்பதால், இங்கு நேரடியாகவே களமிறங்கி உள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை.. அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதாலேயே இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது.

அண்ணாமலை: அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
மேலும் திமுக மற்றும் அதிமுகவின் மொத்த குறியும் பாஜகவின் அண்ணாமலையின் பக்கமே திரும்பியிருக்கிறது.. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, I'm Waiting என்று அவர் பெயரில் சிவப்பு வட்டம் குறியிட்டு "டேக்" செய்து, கோவை அதிமுக வேட்பாளர் பகிர்ந்த எக்ஸ் பதிவு பரபரப்பை கிளப்பியது.
கொங்கு வேட்பாளர் : அண்ணாமலைதான் கொங்கு வேட்பாளர் என்றதுமே, திமுகவின் அமைச்சர் டிஆர்பி ராஜா, "தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன், கோவையில் மட்டன் பிரியாணி ரெடியாகின்றது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிறது" என்று ட்வீட் போட்டு சீண்டியிருந்தார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், "கோவை என்பது எஸ்.பி.வேலுமணி என்ற மாபெரும் சிங்கத்தின் கோட்டை. இந்த சிங்கத்தின் கோட்டைக்குள் வந்து ஆடு சிக்கி உள்ளது" என்று விமர்சித்திருந்தார். ஆனால், அண்ணாமலையோ இதற்கெல்லாம் எந்த பதிலையும் சொல்லவில்லை.. யாரையுமே விமர்சிக்கவில்லை..
ஆடு சிக்கிடுச்சு: கோவையில் ஒரு ஆடு சிக்கிடுச்சி , பிரியாணி போட்டுடலாம் என கனிமொழி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் விமர்சித்திருந்த நிலையில், அதுவரை வாய்திறக்காமல் இருந்த அண்ணாமலை, கடந்த வாரம் திடீரென இதுகுறித்து பேசியிருந்தார்.
திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள்? இன்று தனிமனித தாக்குதல்களில்தான் அரசியல் போய்விட்டது. ஆட்டை பிரியாணி போடுவீங்களோ என்னமோ அந்த ஆட்டை தயவு செய்து கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடுங்கள், அதுதான் என் வேண்டுகோள் என்று கூறி, ஆட்டுக்குட்டி விமர்சனத்தை திமுக பக்கமே திருப்பி விட்டிருந்தார்.
பல்லடம்: நேற்றுகூட, பல்லடம் பகுதியில் பிரச்சாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டிருந்தார்.. அப்போது, விவசாயி ஒருவர், அன்பு பரிசாக ஆட்டுக்குட்டி ஒன்றை வழங்கினார். அதனை ஆசையோடு வாங்கினார் அண்ணாமலை.. அந்த ஆட்டுக்குட்டியை தன்னுடைய கைகளில் ஏந்தி உற்று பார்த்தவர், "குட்டி ஆடு என்பதால் அதனை தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என்று விவசாயியிடம் சொன்னார்.. இதைக்கேட்டதுமே அங்கிருந்தோர் நெகிழ்ந்து விட்டார்கள். இநத வீடியோவையும் பாஜகவினர் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக அண்ணாமலையை திமுகவினர் ஆட்டுக்குட்டி என்றே விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் ஐடி விங்க்-கில் அண்ணாமலை குறித்த ட்வீட்டாக இருந்தால், அவருடைய பெயருக்கு பதிலாக ஆட்டுக்குட்டி எமோஜியையே பதிவிட்டு வருகிறார்கள்... மீம்ஸ்களிலும் அண்ணாமலையுடன் ஆட்டுக்குட்டி படத்தை இணைத்து டிரோல் செய்வது வழக்கம்..
திமுக விமர்சனம்: இதுநாள்வரை இதுகுறித்து அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது தன் மீதான விமர்சனங்களையும் பாசிட்டிவ்வாக அணுகி, திமுக அடித்த பந்தை, திமுக பக்கமே திருப்பிவிட்டு வருவது, தொகுதி மக்களை கவனிக்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications