கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் 'மிகப் பெரிய பயங்கரவாத செயல்'... எச்.ராஜா கடும் கண்டனம்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப் பெரிய பயங்கரவாத செயல் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக திமுக மீதும் எச்.ராஜா விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் வெடிபொருட்கள் கிடைத்தன.
இதனையடுத்து காரில் வெடிபொருட்களுடனான சிலிண்டர் எடுத்து சென்ற போது அது வெடித்தது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு
கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்ததையே இச்சம்பவங்கள் வெளிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து கோவை சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

என்.ஐ.ஏ.விசாரணை ஏன்?
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும், இருக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகள் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
இதனைத் தொடர்ந்து இன்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி. கோவையில் பதற்றம் நிலவியது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

எச்.ராஜா கருத்து
இதனிடையே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மிகப் பெரிய பயங்கரவாத செயல் நடந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. இது எனக்கு 1998 சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்ட சூழ்நிலையில் பயங்கர வாதிகளை கண்டிக்காமல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆக்டோபஸ் என்று விமரிசித்தார்.தி.மு.க மாறாத. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications