"ஆடு" சிங்கத்தின் கோட்டையில் புகுந்துருச்சு.. திராவிட கட்சிக்கு நடுவில் அண்ணாமலை.. பலே கோயம்புத்தூர்
சென்னை:இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேசிய அளவில் கவனத்தை திருப்பியிருக்கிறது கோவை பாராளுமன்ற தொகுதி.. இதற்கு என்ன காரணம்?
தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுகவை பொறுத்தவரை, இப்போதைக்கு செந்தில் பாலாஜி களத்தில் இல்லை என்பதால், கோவையில் பெருத்த கவனத்தை செலுத்தி வருகிறது..

கொங்கு திமுக: இந்த முறை கொங்குவை மெஜாரிட்டியுடன் வென்றாக வேண்டும் நோக்குடன், சிபிஎம் கட்சியிடம் இருந்து கோவையை பெற்றுள்ள திமுக, தன்னுடைய வேட்பாளராக கணபதி பி.ராஜ்குமார் என்பவரை களமிறக்கி உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் நழுவவிட்டதை, இந்த முறை பிடித்துவிட வேண்டும் என அதிமுக இறங்கி உள்ளது. அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் போட்டியிடுகிறார்.
தமிழகத்திலேயே பாஜகவுக்கு அதிக ஆதரவு இருப்பது கோவை என்பதால், இங்கு நேரடியாகவே களமிறங்கி உள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை..
அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதாலேயே இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும், கோவையில் நிலவும் போட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கே ஒரு சவாலாகவும் அமைந்து வருகிறது.
அண்ணாமலை: அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதைத்தான் அண்ணாமலை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார். "கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக குறி: இதையடுத்து, திமுக மற்றும் அதிமுகவின் மொத்த குறியும் பாஜகவின் அண்ணாமலை பக்கம் திரும்பியிருக்கிறது.. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, I'm Waiting என்று அவர் பெயரில் சிவப்பு வட்டம் குறியிட்டு "டேக்" செய்து, கோவை அதிமுக வேட்பாளர் பகிர்ந்த எக்ஸ் பதிவு பரபரப்பை கிளப்பியது.
அண்ணாமலைதான் கொங்கு வேட்பாளர் என்றதுமே, திமுகவின் அமைச்சர் டிஆர்பி ராஜா, "தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன், கோவையில் மட்டன் பிரியாணி ரெடியாகின்றது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிறது" என்று ட்வீட் போட்டு சீண்டியிருந்தார்.
அண்ணாமலை: இதோ இப்போது கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி "கரூரை சேர்ந்த அண்ணாமலை கோவையில் ஏன் போட்டியிடுகிறார்? கரூரில் நிற்காமல் இங்கே ஏன் வருகிறார்? பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டுகள் மட்டுமே இருக்கு.. பாமக, தமாகா கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? சிறப்பாக வேலை செய்தாலும் 10 சதவீத ஓட்டு வாங்க முடியாது" என்றார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், "கோவை என்பது எஸ்.பி.வேலுமணி என்ற மாபெரும் சிங்கத்தின் கோட்டை. இந்த சிங்கத்தின் கோட்டைக்குள் வந்து ஆடு சிக்கி உள்ளது" என்று விமர்சித்தார்.
அதிரடி: ஆனால், அண்ணமலையோ இதற்கெல்லாம் எந்த பதிலையும் சொல்லவில்லை.. யாரையுமே விமர்சிக்கவில்லை.. மாறாக வேறு விதமான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
"எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது... பிரச்சாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன்... கோவையில் மு.க. ஸ்டாலினே வந்து உட்கார்ந்தாலும், பாஜகதான் வெற்றி பெறும்.. கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைக்கப்போகிறோம்" என பகீரை கிளப்பி கொண்டிருக்கிறார்.. அப்படின்னா கோவை யாருக்கு? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications