செந்தில்பாலாஜியை கண்டுகொள்ளாத கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள்! கை நழுவும் அதிகாரம்!
சென்னை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்ப்பதற்காக கோவை மாவட்டத்திலிருந்து நான்கைந்து நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர்.
மற்ற நிர்வாகிகள் யாரும் செந்தில்பாலாஜியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதிலிருந்தே அவர் மீதான கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் அதிருப்தி புரிய வருகிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன் தினம் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அப்போது கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, என நான்கைந்து நிர்வாகிகள் மட்டுமே செந்தில்பாலாஜியை பார்க்க நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.
மற்றபடி யாரும் செந்தில்பாலாஜியை பார்க்கவோ அவருக்காக கவலைப்பட்டது போலவோ தெரியவில்லை. தன்னை சந்திக்க கட்சிக்காரர்கள் வருவார்கள் என்பதால் கிளீன் ஷேவ் செய்து பளிச் தோற்றத்தில் பழைய செந்தில்பாலாஜியாக நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால் பெரியளவில் தன்னை கட்சிக்காரர்கள் பார்க்க வராததால் செந்தில்பாலாஜி முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
தற்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி உள்ளார். இதனால் செந்தில்பாலாஜிக்கும் கோவைக்கும் தற்போதைய நிலவரப்படி கட்சி ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. அவர் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் இலாகா இல்லாத அமைச்சர் தான்.
இதனிடையே அதிமுகவிலிருந்து செந்தில்பாலாஜியுடன் திமுகவில் இணைந்த பிரமுகர்கள் மட்டுமே அவருக்காக உருகி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட போது செந்தில்பாலாஜிக்காக மொட்டை அடிப்பது, விஷேச வழிபாடு நடத்துவது என மும்முரம் காட்டிய கரூர் திமுகவினரும் இப்போது சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications